சாயிநாத நீ வாழ்க, உன் புகழ் வாழ்க
இந்த உலகை காப்பவனே நாங்கள் உன்னை வணங்குகின்றோம்நீ தத்த திகம்பரின் அவதாரம்
மோட்சம் அடைய எங்களுக்கு வழி காட்டு
பிரும்மசதா சங்கருடன் இணைந்துள்ளவர் நீ
தன்னை சரணடைந்தவர்களுக்கு ஆறுதல் தந்து தேற்றுபவர்
என் கண்கள் குளிர எனக்கு காட்சி அளிப்பாயா
எங்களுடைய பாபங்களைக் களைய அருள் புரிவாயா
சாதாரண காபினியே உன் உடை
கைப்பையும், ஒரு பாத்திரமுமே உன் அணிகலன்கள்
வேப்ப மரத்து நிழலில் காட்சி தந்தாய்
புனிதமான ஆண்டியாகவே வாழ்ந்து வந்தாய்
கொடுமை மிக்க இந்த கலியுகத்தில் அவதரித்தாய்
உலக பந்தங்களில் இருந்து விடுதலை தர நீ வந்தாய்
புனித சீரடியே உன் இருப்பிடம்
நீயே அனைத்து அம்சங்களிலும் முக்கிய பகுதி
நீயே திருமூர்த்திகளின் அவதாரம்
உன் கருணை மனிதர்களுக்கும் விலங்கினங்களுக்கும் மகிழ்ச்சி தந்ததே
உன் கண்கள் அன்பையும் கருணையும் பொழியும் அல்லவா
துவாரகாமாயி அதிருஷ்டசாலி
அங்குதானே எம் பெருமானின் இருக்கின்றார்
எங்கள் துன்பங்களும் பாபங்களும்
அங்குள்ள புனித துனியின் நெருப்பில் சாம்பலாயின
நிலையில்லா விளக்கு ஒளி போல, என் மனம் உள்ளது
ஓ, எங்களை மேய்பவனே , எனக்கு தன்னம்பிக்கையைத் தா
ஓ, சாயி எனும் கருணைக் கடலே
உன்னை நம்பி லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றார்கள்
அக்னிஹோத்ரி முலே சாஸ்தரி ஆசிர்வதிக்கப் பட்டவர்
உன் காட்சியைக் கண்டு மகிழ்ந்தவர் குரு கோபாலசுவாமி
உன்னுடைய அளவற்ற சக்தியினால்
விஷப் பாம்பு கடித்தும் உயிர் பிழைத்தவர் சாமா
உன்னுடைய வார்த்தைகள் கடும் புயலை கூட தடுக்கும் சக்தி கொண்டது
நீ அமைதிக்கும் சாந்தத்திற்கும் எடுத்துக்காட்டு
அரைத்த கோதுமையை சர்வரோக நிவாரிணியாக்கினாய்
கொடுமையான காலராவை சீரடிக்குள் நுழைய விடவில்லை
ஓ, என் தெய்வமே, சாயிநாதா, உன்னிடம் நான் சரணடைந்தேன்
ஒரு பூச்சிபோல தாமரை மலரான உன் காலடியில் புரள்கின்றேன்
என் வேண்டுகோளை ஏற்று எனக்கு அருள் புரிவாயா
இந்த உலகின் துக்கங்களில் இருந்து எம்மை கரை சேர்ப்பாயா
பக்த பீமாஜி பல துன்பங்களில் இருந்தார்
துன்பத்துக்கு தீர்வு காண போகாத இடங்கள் இல்லை
ஆனால் உன் உதி மட்டுமே அவர் காச நோய்க்கு மருந்தாயிற்று
காகாஜிக்கு வித்தலாவின் தரிசனம் தந்து மகிழ்ச்சி தந்தாய்
விட்டலாவின் தரிசனம் கிடைக்க அருளும் புரிந்தாய்
தாமுவுக்கு குழந்தை பேரு தந்தாய்
உன்னுடைய அற்புதச் செயல்கள் விதியைக் கூட மாற்றும்
கருணைக் கடலே, எங்களுக்கு அருள் புரிவாயா
எங்களிடம் உள்ள அனைத்தையும் உன்னிடம் தந்துவிட்டோம்
ஓ சாயிநாத, எங்களுக்கு அமைதியையும் மோட்சத்தையும் தருவாயா
முட்டாள் மேக்ஹா ஜாதி புத்தியைக் காட்டினார்
முஸ்லிமை வணங்க முகம் சுளித்தார்
ஆனால் நீயோ சிவனாக அவருக்கு காட்சி தந்தாய்
உன்னுடைய அன்பு அவரை உன் பக்தனாகவே மாற்றியது
தண்ணீரை விளக்கு எரியவைக்கும் எண்ணெயாக மாற்றினாய்
அதன் மூலம் கர்வத்தை அழித்து மாயையை அழித்தாய்
அதிசய செயல் காட்டி விற்பவனை அதிர்ச்சி அடையச் செய்தாய்
வாயடைத்து நின்றவர்கள் உன்னிடம் சரண் அடைன்தனரே
பெண் குதிரையைத் தேடி அலைந்த சாந்த் படேலுக்கு
மாணிக்கக் கல் போன்ற பரதேசி நீ கிடைத்தாய்
உன்னால் பாதுகாக்கப்படும் பக்தர்கள் அதிஷ்டசாலிகள்
பொறுமையுடன் சாயி மீது இதயபூர்வமான பக்தி வை
விடாமுயற்சியோடு அவர் நாமத்தைப் பாடி வர
அவருடைய தாமரை பாதங்களை நம் இருதயத்தில் வைத்திருக்க
அவர் கருணையினால் நம் எண்ணங்கள் நிறைவேறும்
பவாஜா பாயியின் கடன்களை நீ திருப்ப
மரணத்தின் தறுவாயில் இருந்தவர் உயிர் பிழைத்தார்
மரணத்துடன் போராடிக்கொண்டு இருந்த தாத்யாவுக்கு
மறு உயிர் தந்து பிழைக்க வைத்தாய்
விலங்கினங்களும் உன் கருணையைப் பெற்றதல்லவா
அவைகளுக்கும் அன்பும் கருணையும் காட்டினாய்
நீ எங்கும் நிறைந்தவர், நீயே சக்திசாலி
அனைத்து இடங்களிலும் உள்ளவன் நீ என்பது, பக்தர்களுக்குப் புரியும்
உன் தாமரை மலர் போன்ற பாதங்களில் சரண் அடைந்தவர்களுக்கு
வாழ்கை இனிதாக இருக்கும்
அமிர்தம் போன்ற உன் போதனைகள் விலை மதிப்பிலாத முத்துக்கள்
தாய் ஆமையைப் போல எம்மை காப்பாற்றுகின்றாய்
ஒவ்வொரு அணுவிலும் நீ இருக்கிறாய் சாயிநாதா
உன்னுடைய ஒப்பிலா சக்தி எல்லை அற்றது
நான் இதுவரை மூடனாக இருந்ததற்கு நானே காரணம்
என்னால் உன்னுடைய பெருமையைப் பாட முடியவில்லையே
எளியவருக்கும், ஏழைகளுக்கும் நீதானே அடைக்கலம்
இந்த பூமியில் நீ அவதரித்தது எம்மை காப்பாற்றத்தானே
ஓ, சாயினாதா எனக்கு தயை புரிவாயா
உன்னை விட்டு விலகாமல் இருக்க கருணை புரிய வேண்டும்
உயிருள்ளவரை உன் புகழையே பாடிக்கொண்டு இருக்க வேண்டும்
உன் அற்புதங்களை உயிர் உள்ளவரை கூறிக்கொண்டே இருக்க வேண்டும்
பொறுமையுடனும் பக்தியுடனும் உன் நாமத்தை ஜெபிப்பவர்கள்
மன அமைதியும் விமோசனமும் பெறுவார்கள்
சாயி பவானியை தூய மனதுடனும் பாடிவா
அவர் காலடியில் விழுந்து அவரை பூஜித்துவா
துன்பத்தில் இருந்தும் துயரத்தில் இருந்தும் காப்பாற்ற
தன் உண்மையான பக்தர்களின் பக்கத்திலேயே சாயி இருப்பார்
நமக்கு ஆறுதலைத் தரும் மார்கம் சாயி பக்தியே
அவரே கடவுள், அவரே உலகை ஆட்டிப் படைப்பவர்
எவர் ஒருவர் உண்மையான பக்தியில் மூழ்கி விடுவார்களோ
அவன் வேறு எதற்கும் கவலைப்பட தேவை இல்லை
சாயிநாதரின் கருணைக்கு அளவே இல்லை
அமைதியின் நீர் தேக்கம் சாயிநாதர்
மும்மூர்த்திகளின் அவதாரமே, உன் புகழ் வாழ்க
சாயியை வணங்குவோம், என் தெய்வமே நீ வாழ்க
No comments:
Post a Comment