இந்த தத்த பவானி பற்றிய செய்தி சாயி விரத புத்தகத்தில் உள்ளது. தத்த பவானி , சாயி பவானி, சாயி சாலிசா, சாயினாதரின் பதினோரு உறுதி மொழிகள் மற்றும் சாயி ஆரத்தி போன்ற அனைத்தும் சாயி விரதத்தில் உள்ளது. எனவே இதை பக்தர்களின் நலனுக்காக வெளியிடுகின்றேன்.
மனிஷா
மனிஷா
தத்த பவானி
பெருமை மிக்க யோகேச்வரான தத்த திகம்பரா
எங்களை பாதுகாத்து ரட்சிக்க வந்தவர் நீ
கற்புக்கரசி அனுசூயாவும் அத்ரி முனிவரும் காரணகர்தர்களே
உன் அவதாரம் எந்த உலகை பாதுகாக்கவே
நீயே பிரும்ம-விஷ்ணு மற்றும் சிவனின் அவதாரம்
பக்தி சிரத்தையுடன் உன்னை சரணடைந்தவர்களை காப்பவர்
நீயே அறிவு, ஆனந்தம், வாழ்கை மற்றும் தெய்வம்
கம்பீரமான கைகளை கொண்ட மாபெரும் சத்குரு
கையில் பையை வைத்துக் கொண்டு அன்னபூரணியாக உள்ளாய்
புனிதக் கமண்டலம் உள்ள உன் கைகள் அமைதியை தருகிறதே
உன் உருவம் நான்கு என்றும் ஆறு என்றும் பல கைகளைக் கொண்டவர் என்றும் கூறுகின்றனரே
உன் பரந்த தோள்களுக்கு எல்லையும் உண்டோ
தெய்வமே, நான் உன்காலடியில் சரண் அடைந்து விட்டேன்
திகம்பரா, என்னை காப்பாற்று இல்லை எனில் என் வாழ்வை முடித்து விடு
சஹசார்ஜுனனின் தவத்தை மெச்சி காட்சி தந்தவனே
அவனை பாதுகாத்து மன அமைதியும் தந்தவனே
அளவற்ற செல்வமும் சக்தியும் அவனுக்கு தந்தவனே
இந்த உலகில் இருந்து விடுதலை தந்து விமோசனமும் தந்தாயே
இந்த அபலையின் குரல் உன் காதில் விழவில்லையா
நீயே எனக்கு ஆறுதல் தருபவர் , பாதுகாவலர்
விஷ்ணு சர்மாவின் பக்தியை மெச்சி
அவர் வீட்டு சிரார்த்த சமையலை உண்டாயே
அசுரன் ஜம்பதைத்யன் தேவலோக கடவுட்களை தாக்க
நொடிபொழுதில் அவர்களுக்கு உதவ ஓடினாய்
உன் அற்புத சக்தியினால் அசுரனை பொறியில் சிக்க வைத்தாய்
இந்திரனைக் கொண்டு அவனை வதம் செய்து தேவலோகத்தைக் காத்தாய்
உன்னுடைய அற்புதச் செயல்கள் அளவற்றவை
ஓ, சிவபெருமானே உன்னுடைய அற்புதங்களை எப்படி விவரிப்பது?
ஆயுசூனின் துயரங்களைத் துடைத்தாய்
வாழ்நாள் முழுவதும் தேவைகளே இல்லாத நிலையைத் தந்தாய்
சத்யதேவா, யது, பிரஹலாத் மற்றும் பரசுராமனுக்கு
மன விடுதலைத் தந்து ஞானமும் தந்தாய்
உன் கருணை ஈடு இணை இல்லாதது
என்னுடைய வேண்டுகோளை ஏற்க ஏன் மறுக்கின்றாய்
என்னை பாதியிலேயே கைவிட்டு சோதிக்காதே
ஓ, தெய்வமே எனக்கு கருணை காட்டாமல் இருக்காதே
அம்பிகாவின் பக்தியையும் அன்பையும் மெச்சி
அவளுக்கு மகனாகவே பிறந்து அருளினாய்
சமர்தரே , கலியுகத்தில் ரக்ஷகராக அவதரித்தவரே
சாமான்ய சலவையாளிக்கு கருணை புரிந்தாய்
பிராம்மினியின் வயிற்று உபாதையைத் தீர்த்தாய்
கொல்லபட்ட வல்லபேஷுக்கு உயிர் தந்தாய்
தேவா, என்னை ஒருமுறையாவது பார்ப்பாயா,
ஒன்றும் அறியாத என்னை காப்பாற்று
பட்டுப்போன மரம்கூட உன் அருளினால் துளிர் விட்டதே
என்னை பரிதவிக்க விட்டு சோதனை செய்யாதே
வரண்டு போன கங்கை நதிக்கு உயிர் தந்தாய்
மீண்டும் பெருகி ஓட அருள் செய்தாய்
நந்தினியின் வெண் குஷ்டம் உன்னாலே மறைந்தது
அவருடைய அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினாய்
மலட்டு எருமையை படிக் கணக்கில் பால் சுரக்க வைத்தாய்
உன் கருணையால் அவன் போண்டியாகாமல் தப்பினான்
சாதாரண அவரையை பிச்சையாகப் பெற்றாய்
அதன் பலன் அவன் கைகளில் தங்க குடுவை கிடைத்தது
சாவித்ரியின் இறந்த கணவனுக்கு உயிர்பிச்சை தந்தாய்
அந்த விதவையின் கண்ணீர் துடைக்கப்பட்டது
கங்காதரின் மகனை உயிர் பிழைக்க வைத்தாய்
உன் கருணையினால் பூர்வ ஜென்ம பாபங்கள் விலகுகின்றன
தலைகனம் பிடித்த மதோன்மத்தின் தலைகனத்தை அழித்தாய்
பக்த திருவிக்ரமா உன் அருளினால் காப்பாற்றப்பட்டார்
பக்த தான்துக் உன் அருளினால் ஸ்ரீஷைலத்தை அடைந்தார்
உன்னால்தானே நொடிப் பொழுதில் மகாதேவரை சந்திக்க முடிந்தது
உன் பக்தர்களை எட்டு வகையாகப் பிரித்தாய்
ஆனால் நீயோ உருவமற்றவர் , எல்லையும் அற்றவர்
அனைத்து பக்தர்களையும் சரிசமமாகப் பார்கின்றாய்
உன்னைக் காண்பதில் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள்
யவன மன்னனின் தீராத துயரங்களைத் துடைத்தாய்
ஜாதி பேதம் மதம் அனைத்திற்கும் அப்பாற்பட்டவன் நீ
நீ செய்த அற்புதங்கள் கணக்கில் அடங்காதவை
ராமன் மற்றும் கிருஷ்ணா அவதாரங்களில்
கணக்கற்ற மனிதர்களையும் விலங்கினத்தையும் காத்தருளினாய்
காக்கப்பட்ட பறவைகளும், வேடர்களும், பெண்களும் விலங்கினங்களும் புண்ணியசாலிகள்
பொய்யிலே வாழ்பவன் கூட உன் பெயரை உச்சரித்த மட்டில் பாபத்தை துறக்கிறான்
முடியாதவைகள் கூட உன் பெயரை உச்சரித்த மட்டில் எளிதாக முடிகின்றது
உன் நாமம் (சிவன்) துயரங்கள் விலகப் போதுமானது
உடலின், உள்ளத்தின் துயரங்கள் உன் நாமத்தைக் கூறினாலே விலகி ஓடும்
உன் பெயரைக் கேட்டதுமே அனைத்து தீமைகளையும் அழிந்துவிடும்
பேரானந்தம் உன் நாமத்தைக் கூறும்போதே கிடைகிறது
பக்தர்கள் கூறும் உன் நாமம் காற்றிலே மிதக்கும்போதே
பேய் , பிசாசு, தீமைகள் என அனைத்தும் விலகி ஓடிவிடும்
ஊதுபத்தி ஏற்றி எவன் ஒருவன் தத்த பவானியை படிக்கிறானோ
ஒளிபோல அவனை சுற்றி நீ காக்கிறாய்
தூய்மையுடன் துதிப்போர்க்கு மகிழ்ச்சி கிட்டும்
உலக வாழ்வும் சரி, மேல்லுலகிலும் சரி பேரானந்தம் கிடைக்கும்
தத்த பவானியை படிப்பதின் மூலம் சித்தி கிடைக்கும்
ஏழ்மை விலகும், துயரங்களை எதிர்கொள்ளலாம், வளம் பெருகும்
எவர் ஒருவர் தத்த பவானியை 52 வாரங்களுக்கு 52 முறை
52 வியாழக் கிழமைகளில் பக்தி பூர்வமாக படிப்பானோ
அவனை யமராஜர் நிச்சமாக தண்டிக்க மாட்டார்
தினமும் அவர் நாமத்தை சொன்னால் விபத்துகள் வராது
தத்த திகம்பர் பல ரூபங்களைக் கொண்ட ஒரே கடவுள்,
தத்தர் ஆயிரம் பெயர்களைக் கொண்டவர்
தீயைப் போன்ற தூய்மையானவர் தத்ததேவர்
ஓ, தத்தா நாளும் பொழுதும் நான் உன்னையே வணங்குகின்றேன்
உன் மூச்சில் இருந்து வந்தவையே வேதங்கள்
உன் பெருமையை சேஷ நாகத்தினால் கூட பாட முடியவில்லை
அப்படி இருக்க மூடன் என்னால் எப்படி உன் பெருமையை கூற முடியும்
உன்னை பிரார்திப்பதினால் மனதுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் கிடைகின்றது
உன்னை புரிந்து கொள்ளாதவர்கள் இருட்டிலே வாழ்பவர்கள்
தத்தா நீயே உண்மை கடவுள், சர்வ வல்லமை படைத்தவர்
முழு மனதோடு குருதேவரான தத்தரின் பெருமையைப் பாடுவோம்
No comments:
Post a Comment