நெருப்பை அடக்கி ஆண்டவர்
ஒருமுறை துவாரகாமாயியில் இருந்த துனி என்ற அணையா நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது. அது ஒரு மாலை வேளை. பாபா துனிக்கு முன்னால் அமர்ந்து இருந்தார். அப்போது என்னுடைய தந்தையும் அங்கு இருந்தார். அவர் அனு தினமும் மாலை வேளையில் அங்கு வந்து பெட்ரோமாக்ஸ் விளக்குகளை ஏற்றி வைத்தபின் அங்கு அமர்ந்து கொண்டு நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டு இருப்பார். அன்று பாபா எதோ முணுமுணுத்தபடி இருந்தவாறு மேலும் கீழும் நடந்தார். துனிக்கு அருகில் சென்றார். விறகுக் கட்டைகளை எடுத்து துனியில் போட்டார். என் தந்தைக்குப் புரிந்தது இன்று எதோ நடக்கப் போகின்றது.
அந்த கால கட்டத்தில் பாபா இந்துவா, முஸ்லிமா என்ற சந்தேகம் பெரிய அளவில் பலரது மனதிலும் பரவி இருந்தது. என்னுடைய தந்தையும் அதற்கு விதி விலக்கல்ல. திடீரென பாபா அங்கு இருந்தவர்களை திட்டத் துவங்கினார். அவருடைய கோபம் அதிகரிக்க அதிகரிக்க அந்த துனியும் கொழுந்து விட்டு எரிந்தது. அந்த நெருப்பின் பிரகாசத்தினால் துவாரகாமாயியே வெளிச்சத்தில் இருந்தது. முதலில் பாபா தன் தலையில் இருந்த துணிக் கட்டை அவிழ்த்து அதில் எறிந்தார். தலை அலங்கோலமாக விரிந்தது. அடுத்து தான் அணிந்து கொண்டு இருந்த காப்னி என்ற சட்டையைக் கயற்றி அதில் எறிந்தார். துனி என்னும் அந்த நெருப்பின் வேகம் இன்னும் அதிகம் ஆயிற்று .
கடைசியாக தான் கட்டி இருந்த வேட்டியையும் எடுத்து அதில் போட தீ இன்னும் கொழுந்து விட்டு எரிந்தது . அவர் அனைவர் முன்னாலும் நிர்வாணமாக நின்றார். அனைவரும் கேட்டும் வகையில் தான் இந்துவா, முஸ்லிமா என பார்த்துக் கொள்ளுங்கள் என உரத்த குரலில் பாபா கத்தினார். அவர் கண்கள் சிவந்து கிடந்தன. அவர் உடலில் இருந்து வெளிவந்த ஒளி பரவி கண்கள் கூசும் வண்ணம் இருந்தது. . அனைவரும் திகைத்து நிற்க வெளியில் இடியும் மின்னலும் பயங்கரமாகத் தோன்றின. பாபாவின் அருகில் செல்ல ஒருவருக்கும் தைரியம் வரவில்லை. ஆனால் பாகோஜி என்ற ஒரு தொழுநோயாளி பாபாவிடம் சென்று அவர் இடுப்பில் ஒரு துணியை சுற்றிவிட பாபாவின் கோபம் தணிந்தது.
பாபா அமைதி அடைந்து 'சட்க' என கூறப்படும் கம்பை எடுத்து துணியின் மீது தட்டி 'அடங்கு, அடங்கு' என்ற அர்த்தம் தரும் வகையில் 'உகி, உகி' எனக் கூற நெருப்பின் வேகம் அடங்கியது . அப்போதுதான் என் தந்தைக்குப் புரிந்தது, பாபா நெருப்பைக் கூட அடக்கி ஆள முடிந்தவர் என்பது. பாபா தான் மரணம் அடையப் போகும் நாளை அதன் மூலம் அறிவித்து விட்டார். அந்த நாள் தசரா எனப்படும் விஜயதசமி தினமாகும். பாபா என்றாவது ஒரு விஜயதசமி அன்று மரணம் அடைவேன் என்பதை அன்று உணர்த்தினார். அது போலவே அவர் 1918 ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தின் அன்று சமாதி அடைந்தார். ஆகவே பாபா எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்பதைப் பார்க்காமால் அவரை முழுமையாக நம்பி வணங்க வேண்டும் என்பதேஇதன் பாடமாகும் .சாயி என்றால் சக்தி ஈஸ்வர் அதாவது கடவுள் என்பது பொருள்.
Click On Link Below To Read.
1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.
2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.
3.Live Experiences Of Tarkhad Family Chapter 3.
4.Live Experience Of Tarkhad Family Chapter 4.
5. Live Experience Of Tarkhad Family Chapter 5.
6. Live Experience Of Tarkhad Family Chapter 6
7.Live Experience Of Tarkhad Family Chapter 7
8.Live Experience Of Tarkhad Family Chapter 8.
9.Live Experience Of Tarkhad Family Chapter 9.
10.Live Experience Of Tarkhad Family Chapter 10.
11. Live Experience Of Tarkhad Family Chapter 11.
12. Live Experience Of Tarkhad Family Chapter 12.